Better Health Channel
betterhealth.vic.gov.au Department of Health
betterhealth.vic.gov.au Department of Health
  • துயரம் அல்லது பயமூட்டும் அனுபவங்களில் இருந்து உங்கள் குழந்தை மீண்டு வருவதற்கு நீங்கள் உதவலாம். இந்த அனுபவங்களில் பின்வருபவை அடங்கும்: வாகன விபத்துகள், காட்டுத்தீ மற்றும் வெள்ளம், குடும்பத்தில் திடீர் உடல்நலக்குறைவு அல்லது இறப்புm, குற்றம், துஷ்பிரயோகம் அல்லது வன்முறை.
  • குழந்தைகள் பின்வருபவற்றைத் தேடுவார்கள்: நீங்களாகவே நெருக்கடியை எவ்வாறு சமாளிக்கிறீர்கள், அவர்களது உணர்வுகள் மற்றும் நடத்தைகளுக்கு நீங்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறீர்கள்.
  • உங்கள் குழந்தையுடன் அவர்களது அனுபவங்கள் பற்றி பேசுவதற்கு இந்தக் குறிப்புகள் உதவும். உண்மைகளை தனது வயதிற்கு ஏற்ப உங்கள் குழந்தை புரிந்துகொள்ளும் வகையில் நீங்கள் சொல்வது முக்கியமாகும்.
  • நீங்கள் எப்பொழுதும் தொழில்முறை உதவியை நாடலாம். தொடங்குவதற்கு நல்ல இடம் உங்கள் குடும்பப் பொதுமருத்துவர் ஆவார்.

Give feedback about this page

More information

Reviewed on: 28-07-2025